நியூயார்க் அஞ்சப்பர் ஓட்டலில் நயன்தாரா!

நியூயார்க் நகரில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலில் நாட்டுக்கோழி உணவை ரசித்து விரும்பி சாப்பிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

தமிழ், தெலுங்கு, சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் காதலர் விக்சேஷ் சிவனுடன் ஓய்வெடுக்க அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நயன்தாரா கொண்டாடினார். தொடர்ந்து பல்வேறு நகரங்களில் இருவரும் சுற்றி வருகின்றனர். அவ்வப்போது எடுத்த போட்டோக்களையும் இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

.தமிழகத்தில் பிரபல உணவகமான அஞ்சப்பரின் கிளை, நியூயார்க் நகரில் இருக்கிறது. கண்ணன் என்பவர் நிர்வகித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் இந்த உணவகத்திற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் உடன் சென்றிருக்கிறார்.

அங்கு பல்வேறு விதமான உணவுகளை ருசித்திருக்கிறார். குறிப்பாக நாட்டுக்கோழி மசாலா, மீன் உணவு மற்றும் நெல்லூர் சிக்கன் வகைகளை விரும்பி சாப்பிட்டிருக்கிறார். உணவுகள் அனைத்தும் அருமையாக இருந்ததாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் அங்குள்ள டைரியில் எழுதி இருக்கின்றனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018