‘ஆளப்போறான் தமிழன்’ ஆக மாறும் ‘மெர்சல்’ தலைப்பு?!

விஜய் நடித்த ‘மெர்சல்’ ‘படம் ஆளப்போறான் தமிழன்’ என்ற பெயரில் மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்படலாம் என தெரிகிறது. ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், ‘மெர்சல்’ என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைத்துள்ளனர். எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் மனுவை விசாரித்த நீதிபதி ‘மெர்சல்’ என்ற தலைப்பை வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தார்.

மேலும், இதுகுறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் தரவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.இந்நிலையில், ‘மெர்சல்’ தலைப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்தால், ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் வரியையே தலைப்பாக வைத்துவிடலாம் எனப் படக்குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

வரலாற்றுப் பதிவுகள்

Ninaivil

திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
திருமதி ஞானரஞ்சினி பாலராஜா
யாழ். கொக்குவில்
லண்டன்
11 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 11, 2017