டோக்கியோ திரைப்பட விழாவில் தேர்வான விக்ரம் வேதா

டோக்கியோ திரைப்பட விழா ஜப்பானில் நடந்து வருகிறது. மாதவன், விஜய் சேதுபதி நடித்து ஜூலை மாதம் வெளிவந்த விக்ரம்  வேதா மிக பெரிய வெற்றியை பெற்றது. டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் விக்ரம் வேதா திரைப்படம் தேர்வானது குறித்து பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிட உலகளவில் தேர்வான 16 திரைப்படங்களில் விக்ரம் வேதாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ திரைப்பட விழா அக்டோபர் 25 முதல் நவம்பர் 3 ம் தேதி வரை நடைபெற உள்ளது. திரைப்பட விழாவில் விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில் குறிப்பட்ட சில தமிழ் படங்கள் மட்டுமே தேர்வு  செய்யப்பட்டுள்ளது. 

'விக்ரம் வேதா' தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம், இபடத்தின் ரீமேக் உரிமையையும் யாருக்கும்  விற்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்த இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்தார். சஷிகாந்த் தயாரித்திருந்தார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018