சினிமா ஸ்டார் ஆகும் டெண்டுல்கர் மகள்

நடிகர், நடிகைகளின் வாரிசுகள் நடிக்க வருவது வழக்கம். சமீபகாலமாக விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர் நடிகைகளுடன் அடிக்கடி டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர்.

டோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் டி.வி. விளம்பரங்களில் தோன்றி நடிகர்கள்போல் நடனம் ஆடுகின்றனர். டோனியின் வாழ்க்கை வரலாறு  திரைப்படம் ஆனது. அதேபோல் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கையும் படமானது. 

இதில் சச்சினே ஹீரோவாக நடித்தார். குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங் தமிழில் இறுதிசுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். விரைவில் சானியா மிர்ஸா, சாய்னா நேவால் போன்ற விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை படமாகவிருக்கிறது. இந்நிலையில் சச்சின் மகள் நடிகை ஆக முடிவு செய்திருக்கிறார். 

சச்சின் தனது மகன் அர்ஜூன், மகள் சாரா இருவரின் ஆசைக்கு தடைபோட்டதில்லை. அர்ஜூன் கிரிக்கெட் வீரராக விரும்பினார்.

அதை சச்சின் நிறைவேற்றி தந்தார். தற்போது சாராவுக்கு நடிப்பில் ஆர்வம் வந்திருக்கிறது. அதற்கும் சச்சின் ஓ.கே சொல்லியிருக்கிறார். சச்சினின் நெருங்கிய நண்பரான இந்தி நடிகர் ஆமிர்கான், சாராவை நடிகையாக அறிமுகப்படுத்தவுள்ளார். இதையடுத்து சாரா தீவிரமாக நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018