படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் ஜுங்கா

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்பு முன்பே வியாபாரம் ஆகியிருக்கிறது.

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா’ படத்தினை படப்பிடிப்பு செல்லும் முன்பே ஏ&பி குரூப்ஸ் என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இது குறித்து படக்குழுவினர் பேசும் போது, ‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ&பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம்’ என்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வெற்றிப்படத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017