இரண்டு பாகங்களாக வரும் வேலைக்காரன்?

பாகுபலி படத்தைப் போன்று ‘வேலைக்காரன்’ படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவான படம் ‘வேலைக்காரன்’. படத்தின் எல்லா பணிகளும் முடிந்தும் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. ஏற்கனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்பட்டு கடைசியாக, டிசம்பர் 22-ஆம் தேதி ‘வேலைக்காரன்’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி 2018 பொங்கலுக்குத்தான் படம் வெளியாகும், அதுவும் ‘வேலைக்காரன்-1’ என்ற பெயரில் வெளியாகும் என்று கூறுகிறார்கள். படத்தை எடிட் செய்தபோது ‘வேலைக்காரன்’ படம் நான்கரை மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு நீளமாக இருக்கிறதாம். மேலும் இன்னும் இரண்டு பாடல்கள் காட்சி மீதமுள்ளதாம்.

இது குறித்து சிவகார்த்திகேயன், மோகன்ராஜா, ஆர்.டி.ராஜா, எடிட்டர் ரூபன் ஆகியோர் கூடி பேசியுள்ளனர்.

அவர்கள் எடுத்த முடிவில் ‘பாகுபலி’ படம் போன்று இரண்டு பாகங்களாக ‘வேலைக்காரன்’ படத்தை வெளியிடலாம் என்றும், 2018 ஜனவரி பொங்கலன்று முதல் பாகத்தை ‘வேலைக்காரன்-1’ என்றும், இரண்டாம் பாகத்தை 2018 ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டு அன்று ‘வேலைக்காரன்-2’ என்று படத்தை வெளியிட ஆலோசனை செய்திருக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018