கடவுள் என்னைக் கூப்பிடுவார்: பக்தியில் ஏங்கும் ஏசுதாஸ்

கடவுள் கூப்பிடும் போது பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வேன் என்று பாடகர் ஏசுதாஸ் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற பாடகர் ஏசுதாஸ் கிறிஸ்தவர் என்றாலும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். சபரிமலை ஐயப்பன் கோயில், கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயில் ஆகியவற்றுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வார்.

ஒரு முறை குருவாயூர் குருவாயூரப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய விரும்பிய ஏசுதாசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், இனிமேல் கிருஷ்ணர் கோயில்களுக்கே செல்வதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த கச்சேரியில் பேசிய அவர், “பல ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது இருந்த கோபத்தில் இனி கிருஷ்ணர் கோயிலுக்கே செல்ல மாட்டேன் என்று தீர்மானித்துவிட்டேன். சில ஆண்டுகள் முன் என் நெருங்கிய நண்பர் வற்புறுத்தியதால் உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்றேன்.

அத்துடன், கிருஷ்ணர் கோயிலுக்குப் போகமாட்டேன் என்ற என் பிடிவாதத்தைக் கைவிட்டேன். அதற்காக, கடவுளிடம் மன்னிப்பு கேட்டேன்.” என்றார்.

மேலும், “கடவுள் அழைக்கும் போது நான் பத்மநாபசுவாமி கோயில் செல்வேன். பாடுவேன். நேரம் வரும்போது கடவுள் என்னை கூப்பிடுவார்.” என்றும் அவர் கூறினார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018