பிக் பாஸ் நிகழ்ச்சி; போட்டியாளராக எனது முதலும் கடைசியுமான மேடை: சுஜா விளக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னுடைய சிறந்த முயற்சியை வழங்கியிருக்கிறேன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையே போட்டியாளராக எனது முதலும் கடைசியுமான மேடை என்று நடிகை சுஜா கூறியுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதிப்போட்டியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசுக் கோப்பையும், 50 லட்சம் பணமும் வழங்கப்பட்டது.

பிக் பாஸ் இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களின் நடனம் நடைபெற்றது.

இதில் சுஜாவும் நடனமானடினார். ஆனால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது பிக் பாஸ் வீட்டிற்குள் சுஜா சென்றுவிட்டு மேடைக்கு வரும் போது நடக்க முடியாமல் மெதுவாக வந்தார்.இதனால் 'இப்போதும் ஏன் நடிக்க வேண்டும், நடனமாடும் போது நன்றாக ஆடிவிட்டு கமல் முன்னாள் எப்படி நடிக்கிறார் பாருங்கள்' என்று சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

இந்த சர்ச்சை தொடர்பாக சுஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''நான் இவ்வளவு வருடங்களாக கண்ட கனவு நிஜமானதில் மகிழ்ச்சி. கமல் சார் என்னுடன் நடனமாடியதையும் அவர் என் மீது கொண்ட அக்கறையையும் மறக்கவே முடியாது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்.

என்னோடு பிக் பாஸ் இல்லத்தில் இருந்த அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். நிச்சயம் அவர்கள் நன்றாக இருப்பார்கள். இந்த 2017-ம் ஆண்டை எனக்கு மறக்க முடியாத ஆண்டாக ஆக்கிய அனைவருக்கும் என் நன்றி!

இதுவரை நான் காயப்பட்டிருந்தபோதும் பார்வையாளர்களை திருப்திப்படுத்தவே விரும்பியிருக்கிறேன். என்னுடைய சிறந்த முயற்சியை வழங்கியிருக்கிறேன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையே போட்டியாளராக எனது முதலும் கடைசியுமான மேடை. இறுதி நாளுக்கு முந்தைய நாளில் எங்களது நடனத்தை ஒளிப்பதிவு செய்தார்கள்.

எனது கால்கள் மிகவும் மோசமடைந்தன. படத்தொகுப்பில் எல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்தது போல் காண்பிக்கப்பட்டது. சிலவற்றை நான் தெளிவுபடுத்த வேண்டும். உங்களுக்கு அது தெரிய வேண்டும்..

இதுதான் எனக்கு சிறப்பான ஆண்டு.. இன்னும் பல நல்ல விஷயங்கள் நடக்க எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் எப்போதும் எனக்கு வேண்டும். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்'' என்று சுஜா தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017