மனோவளம் குன்றிய பிள்ளைகளை பராமரித்து வரும் விஜிதாவுக்கு அமைச்சர் மேரி மெக்சாள்ஸ் பாராட்டு!


 “தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இல்லாமல் தனது மகளைப் போன்று தமது இயல் பான வாழ்வினை வாழ முடியாது அவதியுறும் ஏனைய மனோ வளம் குன்றிய பிள்ளைகள் அனை வருக்கும் உதவும் வகையில் ஸ்காபுறோவில் “அன்னை தந்த இல்லம்” (யுவுஐ) என்ற அமைப்பி னை ஏற்படுத்தி சேவை செய்து வரும் திருமதி விஜிதா தர்மலிங்கத்துக்கு நான் எனது பாராட்டி னை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். சிறிய அளவில் தனது முயற்சியி னை ஆரம்பித்து இன்று அதனை விஸ்த்தரிக்க நடவடிகக்கை மேற்கொண்டு வரும் அவரது முயற் சிக்கு ஒன்ராறியோ அரசும் இயன்றளவு உதிவியினை நல்கும் என்பதனை தெரிவித்துக் கொள்வ தில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். தனது முயற்சிக்கு நிதி சேகரிக்கும் வகையில் இன்று அவர் நடாத்தும் இசை நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் டிக்கட் வாங் கி வருகை தந்துள்ளமை பேருதவியாகும”. 


கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மார்க்கம் மெக்னிக்கல் வீதியிலுள்ள ஊhயனெini ர்யடட மண்டபத்தில் நடைபெற்ற இசைக் குயில் சித்திராவின் இசை நிகழ்சிக்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஒன்ராறியோ மாகாண குழந்தைகள், இளைஞர் சேவை அமைச் சர் திருமதி மேரி மெக்சாள்ஸ் இவ்வாறு கூறினார். காலில் சுகவீனம் உற்று நடக்க முடியாது இருந்த வேளையிலும் அவர் சக்கர வண்டியை பயன்படுத்தி வந்திருந்தமை அவரது பெருந்தன் மையை எடுத்துக் காட்டியது. அவர் மாத்திரமன்றி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டி ருந்த திரு.சோண் சென் எம்.பி., ரொறண்டோ மாநகர சபை உறுப்பினர்களான திரு. ஜிம் காரியா னிஸ், திரு.நீதன் சான், மார்க்கம் மாநகர சபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி, வர்த்தகப் பிர முகாகளான திரு.சுகுமார், திரு.அபி சிங்கம்,“றிமெக்ஸ்” பரம் ஆகியோரும் திருமதி விஜிதா தர்ம லிங்கத்துக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தனர். அவர் உள்ளம் உருகி கண்ணீர் மல்கியதை க்; காணக் கூடியதாக இருந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விருந்தளிக்க இந்தியாவில் இரு ந்து தனது வாத்தியக் குழுவினருடன் வருகை தந்திருந்த இசைக் குயில் சித்திராவுக்கும் திருமதி விஜிதா தர்மலிகம் மலர் செண்டு வழங்கி வரவேற்றார். சித்திராவுடன் இணைந்து விஜே ரி.வி.சுப் பர் சிங்கர் புகழ் செல்வி ஜெசிக்கா உட்பட மற்றும் மனோ வளம் குன்றியிருந்தாலும் அண்ணாம லை பல்கலைக் கழகத்தில் இசை பயின்று கடந்த ஐந்தாண்டு காலமாக பொது நிகழ்ச்சிகளில் பாடியும், வயிலின் வாசித்தும் வரும் செல்வன் கிறிஷான் தனஞ்செயனும் சித்திராவுடன் இணைந் து மிக அழகாகப் பாடினார்கள். மற்றும் பல உள்ளுர் பாடகிகளான செல்விகள் அனுஷா சிவலி ங்கம் ஆகியோருடன் தாமிரா ரஜீகரன்,அமீரா,சரீகா,மதுஷா ஆகியோரும் பாடல்களைப் பாடினார்கள். 


கண் பார்வை இல்லாதிருந்தும் உயர் கல்வி கற்று இன்று நோவஸ் கோஷியா வங்கியில் பணியா ற்றி வரும் திரு.செல்வமாணிக்கம் பிரபாகரனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.“அன்னை தந்த இல்லத்துக்கு” நிதியுதவி செய்ய வேண்டும் என்ற ஆவலில் பல பிரமுகர்கள் அதிகளவு நிதியுத வி செய்திருந்தமை பாராட்டுக்குரியதாகும். அத்துடன் அதிகளவிலான மக்கள் பணம் கொடுத்து டிக்கட்டுக்களை வாங்கி மண்டபம் நிறைய வந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.


வீரகேசரி முர்த்தி



Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018