எனக்கு கிடைத்த பேரையும், புகழையும் நான் கெடுக்க விரும்பவில்லை: பிரபாஸ்

பாகுபலி படத்தின் மூலம் கிடைத்த பேர், புகழ் போன்றவற்றை நான் கெடுக்க விரும்பவில்லை என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றி உலகளவில் சாதனை படங்களாக அமைந்தது. இப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியவர் பிரபாஸ். இப்படத்தின் நிழலில் வாழு நான் ஒரு போதும் கவலைப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும், அவர் கூறுகையில், பாகுபலி படத்தின் மூலம் எனக்கு கிடைத்த பேர், புகழ் போன்றவற்றை நான் உடைக்க விரும்பவில்லை.

வாழ்நாளில் இது போன்ற வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், இது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நான் அப்படியே தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.இரு படங்களின் மூலம், அமரேந்திர பாகுபலி மற்றும் மகேந்திர பாகுபலியாக உலகமறியும் ஹீரோவாக உருவாகியவர் பிரபாஸ்.

உலகளவில் ரூ.900 கோடி வசூல் படைத்த மாபெரும் பிளாஸ்பஸ்டர் வெற்றிப் படம் பாகுபலி. பண்டைய ராஜ்ஜியத்தின் உரிமைக்காக சகோதர்களுக்கு இடையில் நடக்கும் சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு படங்களிலும் எனக்குத் தான் முக்கியமான கதாபாத்திரம்.

இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அனைவரும் அறியும் ஒரு ஹீரோவாக மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். இப்படி நடக்கும் என்று நான் ஒரு போதும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாஹோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

Ninaivil

அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018