மெர்சல் படத்தைப் பார்க்க ஹாலிவுட் ஸ்டண்ட் மேனுக்கு அழைப்பு!

தல அஜித்தின் விவேகம் படத்தில் நடித்த செர்ஜ் குரோசான் கேசினுக்கு மெர்சல் படத்தை பார்க்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் அதை விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். ‘மெர்சல்’ படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பாரீஸில் உள்ள ‘கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் இந்த படம் வெளியாகயிருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒன்று.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கமான கிராண்ட் ரெக்ஸில் மெர்சல் திரையிடப்படவுள்ளது. ரஜினியின் கபாலி, ராஜமௌலியின் பாகுபலி 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து 3வது தமிழ் படமாக கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் மெர்சல் திரையிடப்பட உள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்று தான்.

தீபாவளியை முன்னிட்டு கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் பிரீமியர் ஷோவுக்கு ஹாலிவுட்டின் ஸ்டண்ட் மேனும், தல அஜித்தின் விவேகம் படத்தில் நடித்தவருமான செர்ஜ் குரோசா கேசினுக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர், கேசினோ ராயல், 300: ரைஸ் ஆப் ஆன் எம்பையர், தி டிரான்ஸ்போர்டர் ரெபுல்டு ஆகிய ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் மேனாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018