மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் இதோ!

மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கயிருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி ஆகியோரது நடிப்பில் உருவான படம் காற்று வெளியிடை. இப்படம் கடந்த ஏப்ரலில் வெளியாகி தோல்விப்படமாக அமைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் அடங்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை புரோடக்ஷன் நம்பர் -17 என்று குறிப்பிட்டுள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, பஹத் பாசில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மெஹா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறார்.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018