ஜனவரியில் மீண்டும் நட்சத்திர கிரிக்கெட்: கார்த்தி அறிவிப்பு

ஜனவரியில் மீண்டும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் கார்த்தி அறிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் என்று பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.இதையடுத்து, பொருளாளர் கார்த்தி கூறுகையில், வரும் ஜனவரி மாதத்தில் கடந்தாண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி மீண்டும் நடத்தப்படும்.

இதற்காக கமல் மற்றும் ரஜினியிடமும் நாங்கள் ஒப்புதலும் பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். நடிகர் சங்க கூட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் மணிமண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் பொறிக்க தீர்மானம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018