டெங்கு காய்ச்சல்: 3500 பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்த காமெடி நடிகர் மயில்சாமி

டெங்கு காய்ச்சல் எதிரொளி காரணமாக காமெடி நடிகர் மயில்சாமி 3500 பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் அதிகப்படியானோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் டெங்கு காய்ச்சலால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் மயில்சாமி சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள 3500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கியுள்ளார். தமிழக அரசு மற்றும் அரசியல் பிரமுகர்கள் செய்ய வேண்டிய இந்த வேலையை தனிமனிதனாவும், காமெடி நடிகராகவும் இருந்து தன்னால் முடிந்த வரை டெங்கு காய்ச்சல் பற்றியும், அதனை தடுப்பது பற்றியும் பிரச்சாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலை செய்தியாக பார்க்காமல் அதனுடைய தாக்கத்தை மட்டுமே நாம் உணர வேண்டும். மக்கள் தாங்களே நிலவேம்பு கசாயம் தயார் செய்து அனைவருக்கும் விநியோகித்தால் டெங்குவை ஒழித்து விடலாம் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக டெங்கு காய்ச்சல் பற்றியும், அதனை தடுக்கும் வழி முறைகள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018