திடீர் இயந்திர கோளாறு: லண்டன், கோலாலம்பூர் விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று அதிகாலை  5.30 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 213 பயணிகள்,  8 விமான சிப்பந்திகள் உட்பட 221 பேர் இருந்தனர்.  விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியபோது,  திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இந்நிலையில், தொடர்ந்து விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பதை உணர்ந்து,  உடனடியாக விமான கட்டுப்பாட்டறைக்கு  தகவல் தெரிவித்துவிட்டு, புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து விமானம் நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர் குழுவினர் வந்து  விமானத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். 

இயந்திரக்கோளாறு நீக்கப்பட்டு மீண்டும்  காலை 8.30 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. ஆனால், மீண்டும் 2வது முறையாக இயந்திரக்கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். 

பொறியாளர்கள்   மீண்டும் இயந்திரக்கோளாறை கண்டுபிடிக்கும்  முயற்சியில் ஈடுபட்டனர். காலை 11 மணி வரை சரி செய்ய முடியவில்லை. அந்த விமானத்தில் செல்ல மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும்   சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ரத்தான விமானம்  இன்று காலை புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானி தகுந்த நேரத்தில் இயந்திரக்கோளாறை  கண்டுபிடித்து உடனடியாக எடுத்த நடவடிகையால் பெரும் விபத்து தவிக்கப்பட்டு  221 பயணிகள் உயிர் தப்பினர்.

மற்றொரு விமானம்:  சென்னையில் இருந்து  நேற்று பகல் 11.50 மணிக்கு கோலாலம்பூர் செல்லவேண்டிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில்  183 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். ஆனால் அந்த விமானம்  புறப்படுவதற்கு முன்னதாகவே தொழில்நுட்ப கோளாறு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன் காரணமாக, இந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது.  183 பயணிகளும் சென்ைன நகரில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் இன்று அதிகாலை புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017