ஐநாவின் மனித உரிமைக்கான சர்வதேச ஆய்வில் புறந்தள்ளப்பட்ட தமிழினப்படுகொலை வாசகம் ஏன் இந்த நிலை

ஐநாவின் மனித உரிமைக்கான சர்வதேச ஆய்வில் புறந்தள்ளப்பட்ட தமிழினப்படுகொலை வாசகம் ஏன் இந்த நிலை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 36வது கூட்டத்தொடர் நிறைவுற்ற பின் நான்கு ஒரு முறை நடத்தப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான சர்வதேச ஆய்வில்(யு.பி.ஆர்)இனப்படுககொலை வாசகம் புறந்தள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் ஐநாவின் மனித உரிமைப்பேரவையின் பக்க அரங்கொன்றில் நடந்த இந்த அமர்வில் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் சிறீலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான விடயங்களை வலியுறுத்தச்சென்றிருந்தன.

ஆயினும் ஏற்பாட்டாளர்களால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.அதில் மிக முக்கியமானது தமிழ் அமைப்புக்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களில் இனப்படுகொலை என்ற வாசகத்தை நீக்கும்படி.

இது சாதாரண விடயமல்ல சிறீலங்கா ஆதரவான நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகளிளால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அளுத்த நடவடிக்கை மட்டுல்ல ஐக்கிய நாடுகள் சபையும் தமிழர் இனப்படுகொலையை விடயத்தை தெரிந்துகொண்டும் சர்வதேச வல்லாண்மை சக்திகளின் எண்ணக்கருவில் வெளிப்பாடாக இயங்க முற்படுவதன் சுயாதீன தன்மையற்ற நிலையையே வெளிப்படுத்துகின்றது.

ஆண்டாண்டு காலமாக ஈழத்தில் தமிழர்கள் சிங்களவர்களால் ஒடுக்கி கொல்லப்பட்ட அவலத்தை ஐக்கிய நாடுகள் சபையில் பலம்பொருந்திய அணியாக ஈழத்தமிழ் அமைப்புக்கள் முன்வைக்காத நிலையும் இத்தகையதோர் நிலைக்கு காரணம் எனலாம்.புலம் பெயர் தேசங்களில் 2009க்குப் பின் பிளவுண்டு கிடக்கும் ஒத்த கொள்கை ஈழத்தமிழர்களின் மற்றும் ஈழத்தமிழ் அமைப்புக்களின் நிலை சிங்கள அரசாங்கத்திற்கு சாதகமான ஒரு சூழ்நிலையையே ஏற்படுத்தியுள்ளது.

புலத்தில் இவ்வாறு நிலைமை இருக்க நிலத்தில் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக மக்களால் வாக்களிக்கப்பட்ட தமிழ்; தேசிய கூட்டமைப்பு சிங்கள அரசாங்கத்திற்கு சாதகத்தை ஏற்படுத்தும் பொருட்டு கால அவகாசத்தை வழங்கியுள்ளதுடன்.சிங்கள அரசாங்கத்தின் இந்த நல்லாட்சி தமிழர்களுக்கு உரிமை வழங்கும் என்ற எழுதப்படாத சான்றையும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கியுள்ளது.

இனப்படுகொலை நடந்த மண்ணில் வாழும் மக்களின் பிரநிதிகள் அரசாங்கத்தின் வலையில் சிக்குண்டு இனப்படுகொலை என்பதையும் சர்வதேச விசாரணை என்பதையும் நீத்துப்போக வைக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்கியுள்ளார்கள்.

புலத்திலும் நிலத்திலும் காணப்படும் தமிழர்களுக்கு இடையிலான பிளவுகள் சிங்கள அரசாங்கத்திற்கு சர்வதேச அரங்கில் சாதக சூழலையே எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகின்றது என்பதற்கு யுபிஆர் அமர்வில் இனப்படுகொலை வாசகம் புறந்தள்ளப்பட்டது எதிர்வு கூறுகின்றது.

எனவே புலம் பெயர் அமைப்புக்கள் பொருளாதார ரீதியிலான வலுவுடன் ஐநாவில் அது தொடர்பான அமர்வுகளில் தொடர்ந்து இனப்படுகொலை சர்வதேச விசாரணை பொதுவாக்கெடுப்பு என்பனவற்றை வலியுறுத்தி நகரவேண்டிய தேவையையே காலம் இயம்பி நிற்கின்றது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018