இன்று சிறை திரும்புகிறார் சசிகலா

'பரோலில்' சென்னை வந்த சசிகலா, இன்று(அக்.,12) மீண்டும் சிறைக்கு திரும்புகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா, ஐந்து நாட்கள், 'பரோலில்' வந்தார்.

சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை.

அவரது பரோல் விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். எனவே, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு, காரில் செல்ல திட்டமிட்டுள்ளார். 'அவரை வழியனுப்ப, திரளாக வாருங்கள்' என, தினகரன் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர்.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017