தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாறும்- விக்னேஸ்வரனை சந்திக்கவும் ஏற்பாடு

தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதால், தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக மாற்றமடைய வேண்டும் என சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள் கடும் அழுத்தம் கொடுப்பதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

அவசர அவசரமாக அரசியல் கட்சியாக மாற்றமடைந்து, வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் தமிழர்களின் தற்போதை அவல நிலை குறித்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தி, தேசிய இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என ஆர்வலர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையின் யாழ், மன்னார் மறை மாவட்டங்களின் அருட்தந்தையர்கள் சிலர் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஆயர் இல்லத் தகவல்கள் கூறுகின்றன என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள கட்சி அரசியல் சாராத உறுப்பினர்கள், தொடர்ந்தும் வேறு வடிவத்தில் அமுக்கக் குழுவாக செயற்பட வேண்டும் என்றும், ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் பலரை உள்ளடக்கி பேரவை, அரசியல் கட்சியாக மாற்றமடைய வேண்டும் என கடும் அழுத்தம் கொடுப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை தமிழ் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய குழு ஒன்றும், இந்த விடயத்தில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். அதேவேளை தேர்தலை மாத்திரம் மையமாகக் கொண்டு தமிழரசுக் கட்சி செயற்படுவதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரவை அரசியல் வடிவம் எடுக்க வேண்டும் என மன்னார் ஆயர் இல்ல அருட்தந்தை ஒருவர் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

இதேவேளை வவுனியாவில் நேற்று புதன்கிழமை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வவுனியா வெகுஜன போராட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவும் மக்களை சந்தித்து, தமிழரசுக் கட்சியின் அசமந்தப் போக்குகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரனை மையப்படுத்தி புதிய அரசியல் கட்சி உருவாக வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பொதுக்குழு ஒன்று விக்கேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் கூறினார்.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018