ஜோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி: தடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி காயம்

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் தனது அலுவலகத்திற்கு நேரடியாக வருகைதந்து தன்மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தப்பி   ஜோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ்நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தப்பி ஜோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயிருந்தன.

இந்த விடயம் தொடர்பாக ஐ.பி.சி தமிழ் செய்திப்பிரிவு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் அந்த விடயத்தை  உறுதிப்படுத்தினார்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சென்ற  மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,

இதனையடுத்து தனது அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு தாம்  கூறியதையடுத்து   காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் தன்மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தாக  நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.  

இந்த சம்பவத்தை   தடுக்க முற்பட்ட தமது அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது நேசகுமார் விமல்ராஜ் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறினார்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர்  பொலிஸ்நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.             

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018