அடுத்து ஒன்னு எடுத்து விட்டேனு வை; வேற உலகம் தாண்டி; அமெரிக்கா மீது வடகொரியா கோபம்!

போர் பதற்றத்தை மூட்டியுள்ள அமெரிக்காவிற்கு, சரியான பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையால் உலகமே அதிர்ச்சிக்கு ஆளாகியது.

இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை விதித்துள்ளன. அதையும் மீறி, வடகொரியாவின் செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

அதிலும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யாங் ஹோ, எங்களின் அணு ஆயுத திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை. எங்களால் ஒருபோதும் கிழக்காசியப் பகுதியில் அமைதி குலையாது.

ஆனால் போரைத் தூண்டும் வகையில் வடகொரியாவிற்கு எதிராக டிரம்ப் பேசிவருகிறார். இது எங்களை மிகவும் கோபமூட்டுகிறது. டிரம்பின் வார்த்தைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்களது நடவடிக்கை இருக்கும்.

அமெரிக்க தீய சக்தியான டிரம்ப் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் செயல்படுகிறார் என்றார்.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017