அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தனவிற்கு தனது பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சினால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி திலக்கா ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதில் பணிப்பாளர் நாயகமாக இன்று முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

இதனை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே மேலதிக செயலாளர் திருமதி ஜயசுந்தர இவ்வாறு குறிப்பிட்டார்.

 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய சிறந்த அதிகாரியாக அடையாளப்படுத்த முடியும் . 

 

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தனது பதவிக்காலத்தில் பாரிய பணியை அரசாங்க தகவல் திணைக்களத்திற்காக நிறைவேற்றியதாகவும் மேலதிக செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

 

அரசாங்க தகவல் திணைக்களம் நாட்டின் முக்கிய திணைக்களம் ஆகும். அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பிலான தகவல்களை பொதுமக்களிடம் தெரிவிப்பதில் முன்னணியில் இருப்பாதாக மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார்.

 

கலாநிதி ரங்க கலன்சூரியவின் பங்களிப்பு தொடர்ந்தும் இந்த திணைக்களத்திற்கு கிடைக்கும் என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வில் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஏராநந்த ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017