10 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லே நகரத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது.

பங்களாதேஷ் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு நடந்த டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணி ஏற்கனவே வெற்றிப்பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையான முதல் ஒருநாள் போட்டி கிம்பர்லே நகரத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது.தென்னாப்பிரிக்கா அணியின் ரபாடா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பங்களாதேஷ் அணியின் முஷ்பிகூர் ரஹீம் அதிகபட்சமாக 110 ரன்களை குவித்தார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்த பங்களாதேஷ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக்கும் அம்லாவும் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 42.5 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் 168 ரன்களும் அம்லா 110 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக சதமடித்து தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு உதவிய டி காக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-௦0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. மேலும் விக்கெட் இழப்பின்றி அதிகபட்ச இலக்கை அடைந்த பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, குறைந்த இன்னிங்ஸில் 26 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை அம்லா பெற்றுள்ளார்.

Ninaivil

திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் (ரஞ்சன்)
பதுளை ஹல்துமுல்ல
நோர்வே
15 நவம்பர் 2017
Pub.Date: November 16, 2017
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
திருமதி பேரம்பலம் பொன்னம்மா
யாழ். உசன்
கொடிகாமம் கச்சாய்
14 நவம்பர் 2017
Pub.Date: November 15, 2017
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
யாழ். கந்தரோடை
கனடா
12 நவம்பர் 2017
Pub.Date: November 14, 2017
திருமதி கஜனி சுபேந்திரன்
திருமதி கஜனி சுபேந்திரன்
யாழ். கோண்டாவில்
லண்டன்
13 நவம்பர் 2017
Pub.Date: November 13, 2017
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
திருமதி ரதன் சுசிலாதேவி (சுசிலா)
யாழ். அல்வாய்
லண்டன்
7 நவம்பர் 2017
Pub.Date: November 12, 2017
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
யாழ். தொண்டைமானாறு
Toronto, கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 11, 2017