என்னா அடி...! ஒரு இன்னிங்ஸில் 40 சிக்ஸர்கள் விளாசி ஒரே ஆளாக 307 ரன் குவித்த வீராதி வீரன்

ஆஸ்திரேலியாவின் ஜோஸ் டன்ஸ்டன் என்ற வீரர் 40 சிக்ஸர் விளாசியதோடு, 307 ரன்கள் குவித்து விவி ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கும், அமெரிக்காவின் மேற்கு அகஸ்டா அணிக்கும் இடையே 35 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி நடந்தது.

இதில் அகஸ்டா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலிருந்தே வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். தொடக்க வீரர்கள் 7,2 ரன்களிலும், அடுத்து வந்த 4 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும், அடுத்து வந்த வீரர்கள் 18,4,0,9 என ரன்கள் எடுத்தனர்.

ஆனால் 3வது வீரராக களமிறங்கிய ஜோஸ் டன்ஸ்டன் என்பவர் மட்டும் களத்தில் நின்று ஒரே ஆளாக, 40 சிக்ஸர்கள் அடித்து 307 ரன்கள் குவித்து, 35 ஓவரில் 354 ரன்கள் குவித்து அணியை ஓஹோன்னு உயர்த்தினார்.விவி ரிச்சர்ட்ஸ் சாதனை முறியடிப்பு:

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவி ரிச்சர்ட்ஸ், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 40 சிக்ஸர்கள் அடித்து, அந்த போட்டியில் மற்ற வீரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக எடுத்த ரன்களை விட 69.48 சதவீதம் அதிக ரன்களை எடுத்திருந்தார்.

இது தான் இதுவரை சாதனையாக இருந்தது.ஆனால் ரிச்சர்ட்ஸின் இந்த சாதனையை தூசியாக்கி ஜோஸ் டன்ஸ்டன் 40 சிக்ஸர்கள் விளாசியதோடு, மற்றவீரர்களின் ரன்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட 86 சதவீதம் அதிகமாக எடுத்து சாதனை படைத்துள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018