டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடர்: சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி பெற்று அடுத்த

சுற்றுக்கு முன்னேறினார்.

டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் சாய்னா நேவால் மற்றும் ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஸ்பெயின் வீராங்கனைக்கு கடும் சவால் கொடுத்தார். 22-20 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை சாய்னா கைப்பற்றினார். நூலிழையில் முதல் செட்டை தவறவிட்டதால் இரண்டாவது செட்டில் கரோலினா மரின் ஆவேசமாக விளையாடினார்.

ஆனாலும், சாய்னா நேவாலின் நேர்த்தியான ஆட்டத்தால் 21-18 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது செட்டையும் அவர் கைப்பற்றினார். இதையடுத்து 22-20, 21-18 என்ற நேர் செட்களில் கரோலினா மரினை வீழ்த்தி வெற்றி பெற்று சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோல், இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பிரனாய் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்திய வீராங்கனை சிந்து சீன வீராங்கனை சென் யூபியுடன் மோதினார். இதில் 17-21, 21-23 என்ற நேர் செட்களில் சிந்து தோல்வியடைந்து டென்மார்க் ஓப்பனில் இருந்து வெளியேறினார். 


Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018