டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யமாகுச்சிடம் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், ஜப்பான் வீராங்கனை யமாகுச்சும்  மோதினர்.

மின்சாரம் தடைபட்டதால் ஆட்டம் சற்று பாதிக்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமாகுச் முதல் செட்டை 21-10 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.

அதன்பின்னர் நடந்த இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி 21-13 என்ற புள்ளி கணக்கில் வென்றார். இறுதியில், யமாகுச் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் சாய்னா நேவாலை வென்றார். இவர்களது ஆட்டம் சுமார் அரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து சாய்னா நேவால் வெளியேறினார்.

இந்த தோல்வி குறித்து சாய்னா நேவால் கூறுகையில், ஜப்பானின் யமாகுச் சிறந்த வீரர். இன்றைய தினம் எனது ஆட்டம் மிக மோசமாக அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018