குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறாது : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து

தேர்தல் வருவதால் குஜராத்துக்கு பிரதமர் மோடி அடிக்கடி செல்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.

குஜராத்துக்கு தேர்தலை அறிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறாது எனவும் முத்தரசன் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறாது என்பதால் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போகிறது.

பா.ஜ.க.வுக்கு உடந்தையாக தேர்தல் ஆணையம் இருப்பது ஜனநாயகத்துக்கு வெட்க கேடு என்று கூறியுள்ளார். வாக்காளருக்கு பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

ரூ.89 கோடிக்கான ஆதாரத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது. அதில் முதல்வர், மற்ற அமைச்சர்கள் மூலமாக பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் கிடைத்தது. ஆனால் ஆதாரம் கிடைத்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் தேரர்தல் நடத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார்.  

டெங்கு காய்ச்சலால் தமிழக மக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் டெங்கு காய்ச்சலுக்கு முதலில் இறந்தார். தமிழகத்தில் பல இடங்களில் தினமும் பலர் இறக்கின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாமல் அரசு தோல்வி அடைந்துவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார். டெங்குவால் இறந்தவர்கள் எண்ணிக்கையை தமிழக அரசு மறைக்கிறது எனவும் முத்தரசன் கூறியுள்ளார்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018