விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் வரும் காதல் காட்சிகள் தற்போது நிஜமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2013--ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது.

பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர். ஆனாலும் விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது.

இதையடுத்து 2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்ததாகவும் இதனால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் அனுஷ்காவை சமூக வலைதள பக்கத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கு, அனுஷ்கா ஒரு சிறந்த பெண் அவரை எனது ரசிகர்களாக இருந்தால் இதுபோன்று செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டார். இதையடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்யப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிபடுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்கள் அமைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு தேவை என அவர் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருந்தாலும் வரும் 2018-ம் ஆண்டுக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பெண்ணாக (கேப்டன் மனைவி) அனுஷ்கா ஷர்மா இருக்கப்போவது உறுதி என்றே கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018