இலங்கை டெஸ்ட் தொடர் இடம் பிடித்தார் முரளி விஜய்: ரகானே துணை கேப்டன்

இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணியில், தமிழகத்தை சேர்ந்த தொடக்க வீரர் முரளி விஜய் இடம் பிடித்துள்ளார். அஜிங்க்யா ரகானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் இந்தியா வரும் இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இலங்கை சென்று விளையாடியபோது மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய முரளி விஜய், தற்போது காயம் முழுவதுமாக குணமடைந்துள்ள நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். தமிழக அணி கேப்டனும் தொடக்க வீரருமான அபினவ் முகுந்த் நீக்கப்பட்டுள்ளார்.

முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களாக ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் நீடிக்கின்றனர். இலங்கை டெஸ்ட் தொடருக்கான துணை கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சுக்கு உமேஷ், ஷமி, புவனேஷ்வர், இஷாந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்கின்றனர்.

இந்தியா டெஸ்ட் அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, கே.எல்.ராகுல், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா. 

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018