ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 117 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் 21-ம் தேதி தொடங்கியது. ஜிம்பாப்வே அணியினர் நிதானமாக விளையாடினர்.

இருப்பினும் வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினர். ஜிம்பாப்வே அணி 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணியின் மசகாட்சா 57 ரன்களும், சலொமன் மைர் 47 ரன்களும், பிரண்டன் டெய்லர் 73 ரன்களும், சிகந்தர் ரசா 30 ரன்களும், கிரிஸ் போபு 33 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்திய வெஸ்ட்இண்டீசின் தேவேந்திர பிசூ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. வெஸ்ட்இண்டீஸ் - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 29-ம் தேதி தொடங்குகிறது.


Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018