தனுஷ், விஜய் சேதுபதி வரிசையில் இடம்பிடிப்பார் சந்தீப் - இயக்குநர் சுசீந்திரன்

‘தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் வரிசையில், சந்தீப் கிஷணும் இடம்பிடிப்பார்’ என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், விக்ராந்த், மெஹ்ரீன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசை அமைத்துள்ளார். 

நவம்பர் மாதம் 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுசீந்திரன், “சந்தீப் கிஷண், இந்தப் படத்தில் அருமையாக நடித்துள்ளார். நான் அவருடன் ‘ஜீவா’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டும்.

தமிழில் விஷ்ணு விஷால் நடித்த கேரக்டரில், தெலுங்கில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக அது நிறுத்தப்பட்டுவிட்டது. தனுஷ், விஜய் சேதுபதி போல பி & சி வரிசையில் சந்தீப்பும் இடம்பிடிப்பார்” என்றார்.