2-வது ஒருநாள் போட்டி: தினேஷ் கார்த்திக், தவான் அரைச்சதத்தால் இந்தியா வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியை வென்று தொடரில் முன்னிலை பெற்றிருந்த நியூசிலாந்து அணி தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. டாஸ் வென்ற அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில் மற்றும் முன்ரோவின் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்திய இந்திய பவுலர்கள் நிதானமாக பந்து வீசினர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி 230 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், பூம்ரா, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார் ரோகித் ஷர்மா 7 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி உதவியுடன் தவான் சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்தார்.

கேப்டன் கோலி 29 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். பின்னர், களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தயான் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தது. தவான் ஆட்டமிழந்தாலும் பாண்டியா சற்றே அதிரடி காட்டினார்.

46 ஓவர் முடிவுகளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 64 ரன்களுடனும், தோனி 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது.

Ninaivil

திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
திருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)
யாழ். மாதகலை
கொழும்பு பம்பலப்பிட்டி
விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 8, 2018