நயன்தாராவின் படத்தை வெளியிடும் விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம்

விஜய் சேதுபதி படத்தை விநியோகம் செய்த நிறுவனம், தற்போது நயன்தாரா மற்றும் சித்தார்த் நடித்த படங்களை விநியோகம் செய்கிறது.

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. ராகவா லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ படத்தைத் தயாரித்த இந்த நிறுவனம், சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ படத்தை ரிலீஸ் செய்தது.

சித்தார்த், ஆன்ட்ரியா, அதுல் குல்கர்னி நடித்துள்ள ‘அவள்’ படம், நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸாகிறது. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. அதேபோல், நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படத்தையும் இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்கிறது. இந்தப் படம் நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.