சினிமாவே வேண்டாம் ; நடிகை ரிச்சா அதிரடி முடிவு

சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், இனிமே எப்படிப்பட்ட வாய்ப்பு வந்தாலும் நடிக்கப் போவதில்லை என நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.

தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா. அதன் பின் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே, தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவே அழைத்தனர்.

இதனால் வெறுத்துபோன ரிச்சா, இனிமேல் எப்படிப்பட்ட வாய்ப்பு வந்தாலும் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும், மேல் படிப்பிற்காக அவர் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார் எனவும் கூறப்படுகிறது.