விக்ரம் வேதா இயக்குநருடன் இணையும் அஜித்?

சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்த அஜித், தனது அடுத்த படத்தில் விக்ரம் வேதா இயக்குநருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் சிவா இயக்கத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடித்தது குறிப்பிடத்தக்கது. விவேகம் திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் வந்ததால் அந்த படம் தோல்வி அடைந்ததாகவே கருதப்பட்டுகிறது.  

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சில நாட்களுக்கு முன் அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அஜித் விக்ரம் வேதா இயக்குநருடன் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

புஷ்கர், காயத்ரி இருவரும் சேர்ந்து எடுத்த படம்தான் விகரம் வேதா. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித், இந்த இயக்குநர் ஜோடியை அழைத்து கதை கேட்டுள்ளாராம்.

அஜித்தின் அடுத்த படம் மற்றும் அதை இயக்க போகும் இயக்குநர் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.