தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் வெளியீடு!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடல் முழுவதும் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த  படத்தை  தயாரித்துள்ளது.இந்நிலையில் சொடக்கு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரல் வந்து  நடுத்தெருவில் நின்னு சொடக்கு போடுது என்ற பாடல் அனிருத் இசையில் சும்மா தெறிக்க விட்டிருக்கிறார். ஏற்கனவே வெளியான சொடக்கு பாடல் டீஸரில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் சொடக்கு போடுவதுப்போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.