பிரபுதேவா ஜோடியா நிவேதா பெத்துராஜ்?

பிரபுதேவா நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

‘சதுரம் 2’ படத்தை இயக்கியவர் சுமந்த் ராதாகிருஷ்ணன். இவர் அடுத்ததாக பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். தொல்லியல் நிபுணர் பற்றி இந்தக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படம், தோல்வியைத் தழுவியது. அடுத்து சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடித்த ‘டிக் டிக் டிக்’ படம் ரிலீஸாக இருக்கிறது.