விஜய்யின் வீடு, இப்போது விஜய்யின் கதை

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பெரிய வெற்றியடைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த எமன் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. சீனிவாசன் இயக்கத்தில் தற்போது நடித்து 'அண்ணாதுரை' என்ற படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காளி' படத்திலும் நடித்துவருகிறார்.

இந்த இரண்டு படங்களும் தனக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த இரண்டு படங்களும் முடிவடைந்த பிறகு சீமான் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி.

சீமான் எழுதிய 'பகலவன்' கதையில் சில வருடங்களுக்கு முன் விஜய் நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ பின்னர் பகலவன் படம் கைவிடப்பட்டது. அந்த கதையைத்தான் சமீபத்தில் விஜய் ஆண்டனியிடம் சொல்லி கால்ஷீட் வாங்கியுள்ளாராம் சீமான். 

விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த விஜய் ஆண்டனி சில வருடங்களுக்கு முன் அந்த வீட்டை விலைக்கு வாங்கினார். விஜய் நடிக்க விருந்த கதையில் தற்போது நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி.