'பிக் பாஸ்' வெற்றியாளர் ஆரவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு!

'பிக் பாஸ்'சில் வென்ற ஆரவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். இப்போது ஆரவுக்கு தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

''என்னைத் தேடி பட வாய்ப்புகள் வருகின்றன. கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி தெரிவிப்பேன் என்று ஆரவ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

 பிக் பாஸுக்கு பிறகு என் முதல் படம். சிலம்பாட்டம் புகழ் சரவணன் இயக்கத்தில். வரவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆரவ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

படங்களில் ஓவியாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்று ஆரவிடம் முன்பு கேட்டதற்கு 'நிச்சயம் நடிப்பேன்' என்றார். இந்த படத்தின் நாயகி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

ஆரவை காதலித்து தோல்வி அடைந்த ஓவியா தற்போது வேறு படங்களில் மும்முரமாக உள்ளார். இது தவிர அவர் விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரவும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.