அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கும் பிள்ளை

அடல்ட் படங்களாகவே நடிக்கிறீர்களே...’ என்று கேட்டால், அப்பாவைக் காரணம் காட்டுகிறாராம் மகன்.

ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராகத் திகழ்ந்தவர் நவரசம். அவருடைய மகனை மிகப்பெரிய இயக்குநரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்தப் படம் தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்ல, அதற்கடுத்து வந்த படங்களும் தோல்வி அடைந்தன.

சமீபத்தில் வெளியான அடல்ட் காமெடிப் படம்தான் வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. எனவே, அடுத்தும் அடல்ட் காமெடிப் படத்திலேயே நடித்து வருகிறார். இப்படி நடித்தால் இமேஜ் பாதிக்காதா? என்று யாராவது கேட்டால், ‘ஆரம்பத்தில் அப்பாவே இப்படித்தான் நடிக்க ஆரம்பித்து, பின்னாட்களில் பெரிய ஆளானார். ஏகப்பட்ட நடிகர்களை நான் இப்படி உதாரணம் காண்பிக்க முடியும்’ என்று அவர்கள் வாயை அடைத்து விடுகிறாராம்.