இரண்டாவது முறையாக சயிஷாவுக்கு கிடைத்த அனுபவம் என்ன தெரியுமா?

இரண்டாவது முறையாக சயிஷாவுக்கு அந்த ஷூட்டிங் அனுபவம் கிடைத்துள்ளது.வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சயிஷா. இவர் தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஜுங்கா’ படத்தில் நடித்து வருகிறார்.

கோகுல் இயக்கிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வந்தது. காட்சிகளை அங்கு படமாக்கியவர்கள், தற்போது பாடலை ஷூட் செய்வதற்காக ஆஸ்திரியா சென்றுள்ளனர். குளிரில் பாடல் ஷூட் செய்யப்படுவதாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள சயிஷா, ‘தனக்கு இது இரண்டாவது அனுபவம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்திற்காக ஆஸ்திரியாவில் ஷூட்டிங் நடைபெற்றுள்ளதாக சயிஷா கூறியுள்ளார். ‘ஜுங்கா’ படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.