மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்

சிவா மற்றும் அஜித் அஜித் கூட்டணியில் உருவான ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நான்காவது முறையாக இணைய இருக்கிறார்கள்.அஜித், சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடம் மற்றும் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படத்தை அடுத்து அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. மேலும், அந்த படம் வரலாற்று சம்மந்தப்பட்ட கதை என்றும், போலீஸ் அதிகாரி என்றும் கூறப்பட்டது. இதைத்தவிர விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ninaivil

திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar