நயன்தாராவுடன் ராஜஸ்தானில் டூயட் பாடும் சிவகார்த்திகேயன்

வேலைக்காரன்’ படத்துக்காக ராஜஸ்தானில் ஒரு பாடலைப் படமாக்குகின்றனர்.

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கிவரும் இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரிலீஸாகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு பாடலைப் படமாக்குவதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளது படக்குழு. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு, பிருந்தா நடனம் அமைக்கிறார்.