என்ன ஆச்சு ஸ்ருதிக்கு இப்படி வெயிட் போடுகிறார்?

ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாகவே அமைதி காத்து வருகிறார். சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் நடித்தவர் அதன்பிறகு, ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். திடீரென்று அப்படத்திலிருந்து விலகினார். தந்தை கமலுடன் நடிக்க உள்ள ‘சபாஷ் நாயுடு’ படமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. புதிய படங்கள் எதையும் ஸ்ருதி ஒப்புக்கொள்ளவில்லை. சமீபத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த ஸ்ருதியை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

எப்போதுமே ஒல்லியான தேகத்தை பராமரித்து வரும் ஸ்ருதிஹாசன், தற்போது அனுஷ்கா போல் குண்டு பாப்பா தோற்றத்துடன் காணப்பட்டதுதான் அதிர்ச்சிக்கு காரணம். இதையடுத்து ஸ்ருதி பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் உடன் ஸ்ருதி நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றார். 

கமல்ஹாசனும் சில மாதங்களுக்கு முன் மைக்கேலை சந்தித்து பேசினார். இதையடுத்து ஸ்ருதி மைக்கேல் திருமணம் நடக்கலாம் என்று தகவல் வெளிவந்தது. அது பின்னர் அடங்கிப்போனது. இந்நிலையில்தான் ஸ்ருதிஹாசன் கூடுதல் வெயிட்போட்டிருப்பது, வெளி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாமலிருப்பது, புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் தவிர்ப்பது போன்ற செயல்களால் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018