2.0 இசை வெளியீட்டின் போது பேரன்களுடன் கொஞ்சிய ரஜினி

நடிகா் ரஜினிகாந்த் 2.0 இசை வெளியீட்டு விழாவின் போது தனது பேரன்களுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படம் இணைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளப்படம் 2.0. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், சங்கா், ஏ.ஆா்.ரகுமான், எமிஜேக்ஷன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். படத்தின் 2 பாடல்கள் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆனால் அதே சமயம் 2.0 ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்து மற்றொரு சம்பவமும் ஹிட்டாகியுள்ளது. ரஜினிகாந்த் தன் பேரன்களுடன் பேசும் புகைப்படம் தான் அது. தனுஷ் மற்றும் ஐஸ்வா்யா ரஜினிகாந்தின் மகன்கள் லிங்கா, ஆரத்யா தன் தாத்தா ரஜினிகாந்துடன், இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், ஐஸ்வா்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

இன்னொரு சம்பவமும் உள்ளது, இசை வெளியீட்டு விழாவுக்கென மொத்தம் ரூ.12 கோடி செலவிட்டிருக்கின்றனா் என்பது கூடுதல் தகவல். ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி துபாய் முழுவதும் உள்ள மால்களில் நேரலை செய்யப்பட்டது.