முதன்முறையாக ‘2.0’ விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கரின் மகன்!

2.0’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கரின் மகன் முதன்முறையாக கலந்து கொண்டுள்ளார்.

இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர் எனலாம். அந்தளவுக்கு தன் படங்களில் தொடர்ந்து பிரமாண்டத்தை காண்பித்து வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் உருவான ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது, இதில் பல்வேறு திரை நட்சத்திரங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில் ரகுமானின் மகன், தனுஷின் மகன்கள் என எல்லோரும் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் ஷங்கரின் மகனும் இந்த விழாவில் கலந்துக்கொண்டுள்ளார், இதுவரை வெளியே வராத ஷங்கர் மகனின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.