சசிகுமார் படத்துக்கு மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்?

சசிகுமார் நடித்துள்ள ‘கொடி வீரன்’, மற்ற படங்களைவிட ஒருநாள் முன்கூட்டியே ரிலீஸாக இருக்கிறது.முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘கொடி வீரன்’.

இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், விஜய்யின் ‘மெர்சல்’ படம் ஏகப்பட்ட தியேட்டர்களைப் பிடித்துக் கொண்டதால், இந்தப் படத்துக்குப் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸாகும் என்றார்கள். ஆனால், சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காததால், ரிலீஸ் செய்ய முடியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் வேறு படங்கள் முந்திக் கொண்டதால், நவம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை ‘கொடி வீரன்’ ரிலீஸாகிறது.

மறுநாள் வெள்ளிக்கிழமை பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா நடித்த ‘திருட்டுப்பயலே 2’ மற்றும் நிவின் பாலி நடித்துள்ள ‘ரிச்சி’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. பொதுவாக, விழாக்காலங்களில்தான் ஒருநாள் முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்வார்கள். அப்படியில்லாமல் சசிகுமார் படத்துக்கு மட்டும் இப்படி விலக்கு கிடைத்திருப்பது, தமிழ் சினிமா வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

Ninaivil

திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018