ஓவியாவை தொடர்ந்து வெளியான “தாரா”

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை ஓவியாவிற்காக “வந்துடேனு சொல்லு ஓவியா ஆர்மி” என்ற பாடலை வெளியிட்டதன் மூலம்பிரபலமடைந்த இலங்கையை சேர்ந்த வைரியன் இசைக்குழு “தாரா” என்ற புதிய பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இது “Old School” இசை பாணியில் அமைந்துள்ள பாடலின் இசை மற்றும் இசைக் கலவையினை பிரேம் ராஜ் செய்துள்ளதோடு, பாடல் வரிகள் மற்றும் சொல்லிசையினை ரமேஸ் காந்த் எழுதியுள்ளார். மேலும் பாடலினை பிரேம் ராஜ் மற்றும் பிரசாதன் பாடியுள்ளனர்.

இதுகுறித்த பாடல் வைரியன் இசைக்குழுவின் அதிகாரப்பூர்வ யுடியூப் அலைவரிசையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ‘தாரா’ பாடலானது இலங்கையில் இதுவரை தமிழ் இசைத்துறையில் யாரும் வடிவமைக்கப்பட்டில்லாத புதிய முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, காணொளி பாடலாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.