வெங்கட் பிரபுவின் அடுத்தப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியீடு

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிப்பில் வைபவ் நடித்து வரும் ஆர்.கே நகர் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சென்னை 28 – இரண்டாம் பாகம் திரைப்படத்தின் அடுத்ததாக வெங்கட் பிரபு தன்னுடைய பிளாக்டிக்கெட் தயாரிப்பு நிறுவனத்தில், சரவண ராஜன் இயக்கத்தில், தயாரித்துக் கொண்டிருக்கும் படம் ஆர்.கே. நகர்.

அரசியல் நயாண்டி கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், வைபவ் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சனா அல்தாஃப்பும் நடித்துள்ளார். 

மேலும், வழக்கம் போல், சம்பத், அஞ்சனா, கீர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க காமெடி நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22 ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.