ஜிம்பாப்வேயுடன் 2-வது டெஸ்ட் போட்டி: வெற்றியின் விளிம்பில் வெஸ்ட் இண்டீஸ்

ஜிம்பாப்வேயுடனான 2-வது டெஸ்டில் டவுரிச் மற்றும் ஹோல்டர் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோ குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் க்ரிமர் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் 109.1 ஓவரில் 326 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மூர் 52 ரன்னிலும், மசகட்சா 147 ரன்னிலும், சிகந்தர் ரசா 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோச் 3 விக்கெட்டும், கேப்ரியல், பிஷூ தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வொயிட்டும், பாவெலும் களமிறங்கினர். பாவெல் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில்

விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆனாலும் டவுரிச் மற்றும் ஹோல்டர் ஜோடி அபாரமாக விளையாடியது. இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். டவுரிச் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததும், ஹோல்டரும் 110 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 448 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ரசா 5 விக்கெட்டும், கிசோரோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஜிம்பாப்வேவை விட வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத்தொடர்ந்து, ஜிம்பாப்வே அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதையடுத்து ஆட வந்த பீட்டர் மூர் மற்றும் சிகந்தர் ரசா ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். இறுதியில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 2 விக்கெட்டும், கேப்ரியல், பிஷு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீசை விட 18 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது.

இன்று ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால், ஜிம்பாப்வே அணியின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற போராடும் என தெரிகிறது.

Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018