ஆரவ் கொடுத்த பார்ட்டியில் ஓவியா; பெருமிதம் கொள்ளும் ஓவியா ஆர்மி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர் ஆரவ், அவரது பிறந்நாள் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடினார். ஆரவின் பிறந்தநாள் பார்ட்டியில் ஓவியா கலந்து கொண்டதை நினைத்து அவரது ஆர்மிக்காரர்கள் பெருமைப்படுகிறார்களாம்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. என்வே மனமுடைந்த ஓவியா பிக்பாஸ் வீட்டில்  இருந்து வெளியேறினார். அதன் பிறகு சிங்கிளாக நிம்மதியாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தார் ஓவியா.

ஆரவ் தனது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். ஆரவின் பிறந்தநாள் பார்ட்டியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக ஓவியா பார்ட்டிக்கு வந்திருந்தார். மேலும் கணேஷ் வெங்கட்ராம், கணேஷ், ஆர்த்தி மற்றும்  காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆரவின் பிறந்தநாள் பார்ட்டியில் ஓவியாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட  புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள். 

ஓவியா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளதை, ஓவியா ஆர்மிக்காரர்கள், தலைவி கூறுவது என்னவென்றால்  மன்னிப்போம் மறப்போம் என ட்வீட் செய்துள்ளனர்.